அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ரயில்வே அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் 130 ரயில் சேவைகள் அதிவிரைவு ரயில்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 500 மெயில் விரைவு ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.பயணிகள் தங்கள் சேரும் இடத்தை 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்களுக்கு முன்பாக சென்றடையும் வகையில் ரயிலின் வேகம் 5% அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் மெயில் ரயில்கள் 84 சதவீதம் சரியான நேரத்தில் சென்றடைந்துள்ளன.இது கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.