Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமான கட்டணம் திடீர் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தற்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகளின் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.

அதன்படி ஐயாயிரம் வரை விற்கும் டெல்லி – பாட்னா விமான கட்டணம் தீபாவளியை ஒட்டி 8000லிருந்து 13000 மாக உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு – தர்பங்கா விமானக்கட்டணம் ரூ.21,000 என்றும், அதேபோல் மும்பை – தர்பங்கா விமான கட்டணம் ரூ.21,000 என உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பண்டிகை நேரத்தில் விமான கட்டணம் உயர்த்தப்படுவதால் விமான பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

Categories

Tech |