Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து போலீஸ் மீது திடீர் தாக்குதல்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. கடலூரில் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டிணம் பகுதியில் குகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மணிகூண்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் முன்பாக வில்வ நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் ரைட் சுரேஷ் உட்பட 3 பேர் சாலையை மறைக்கும் விதமாக நடனமாடிக்கொண்டே சென்றுள்ளனர். இதை பார்த்த குகன் 3 பேரையும் ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் குகனை கடுமையாக தாக்கியதோடு கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த குகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து குகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு காவலரை சாலையில் வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |