இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் விலகுவதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் அதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதில் முகமது ஷமி (அ) தீபக் சாஹரை அணியில் சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த இடத்திற்கான போட்டியில் உமேஷ் யாதவ், முகமது சிராஜ். அவேஸ் கான், உம்ரான் மாலிக் ஆகியோரும் உள்ளனர். இதில் ஆஸ்திரேலிய பிட்சில் உம்ரான் மாலிக் வேகம் எடுபடும் என சிலர் கருதுகின்றனர்.