Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டேக் டைவெர்சன்…. “ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை”…. போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது..

இதனால் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி பெரியார் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இந்த வாகனங்கள் பர்னபி சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி பிளவர்ஸ் சாலை வழியாக சென்றது. மேலும் கெங்குரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பிலிருந்து ஈகா சந்திப்பு நோக்கி பெரியார் நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக தடையில்லை.

Categories

Tech |