பெண்கள் எப்பொழுதும் விதிவிலக்காக இருக்கக் கூடாது என பிரபல நடிகை கூறியுள்ளார்.
முன்னாள் உலக அழகி என்று போற்றப்படுபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இமான் இசையில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். இதனையடுத்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது அமெரிக்காவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களாவை வாங்கி அதில் தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டி மேரியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவழியுமான கமலா ஹாரிஸை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது. அமெரிக்க நாட்டில் வாக்களிப்பதற்கு எனக்கு உரிமை இல்லை.
ஆனால் எனது கணவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. மேலும் எதிர்காலத்தில் எனது மகள் மால்டி மேரி வாக்களிப்பார். இந்நிலையில் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வரை முக்கியமான முடிவுகள் எடுக்கும் இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள். எனவே பெண்கள் விதிவிலக்காக இருக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் உலக மக்கள் மிகப்பெரிய சவால்களை எதிர் கொண்டார்கள். மேலும் தற்போது அதிலிருந்து மீள்வதற்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.