Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறீர்களா?… இதோ உங்களுக்கான சலுகைகள்… புதிய விசா நடைமுறைகள் அறிமுகம்…!!!

ஐக்கிய அரபு அமீரகம் அதிக சலுகைகளோடு விசா நடைமுறைகளை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பத்து வருடங்கள் விரிவுபடுத்தப்பட்ட தங்க விசா திட்டம், திறமை மிகுந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் போன்றவை இருக்கிறது.

சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கலாம். கிரீன் விசா உடன் வருபவர்கள் அனுமதி காலாவதியான பிறகும் ஆறு மாதங்களுக்கு தங்க முடியும். தங்க விசா இருக்கும் நபர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளுக்கு ஸ்பான்சர் செய்ய முடியும்.

மேலும் தங்கள் தொழிலில் 100% உரிமைக்கான பலனை பெற முடியும். சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் இரண்டு மாதங்கள் தங்க முடியும். வேலை ஆய்விற்கான விசா வைத்திருப்பவர்கள், ஸ்பான்சர் இன்றி வேலைவாய்ப்புகளை தேடுவதற்கு அனுமதி பெறுவார்கள் போன்ற பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Categories

Tech |