Categories
உலக செய்திகள்

3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவு… ‘காப்பான்’ படத்தை மிஞ்சும் வெட்டுக்கிளிகள்…. வேதனையில் விவசாயிகள்..!!

பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .

Image result for grasshoppers in pakistan

வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை கடந்த ஆண்டை விட இரு மடங்காகவும் உயர்ந்துள்ளது. மேலும், வருகின்ற மாதங்களில் உணவுத் துறை முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம் விரைவாக முயற்சி எடுத்து வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Image result for grasshoppers in pakistan

இதுவரையில் பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3 லட்சம் சதுர கி.மீட்டர் பரப்பளவிற்கு வெட்டுக்கிளிகள் விளைநிலங்களை அழித்து நாசம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘காப்பான்’ படத்தில் விவசாயத்தை அழிக்க  வில்லன் வெட்டுக்கிளிகளை அனுப்புவது நமக்கு மீண்டும் நியாபகம் வருகிறது.

Categories

Tech |