Categories
தேசிய செய்திகள்

ஒரு ரயிலை உருவாக்க…. இவ்வளவு கோடி செலவாகுமா?…. பலரும் அறியாத உண்மை….!!!!

தினசரி லட்சக்கணக்கானோர் இந்திய இரயில்வேயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் போக பேருந்து, விமானம் பயணத்தை விடவும் ரயில் பயணத்தையே மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். அலைச்சல் மிககுறைவு மட்டுமின்றி, பயணத்துக்கான செலவும் மிகமிக குறைவாக உள்ளது. இதுவே மக்கள் இரயில் பயணத்தை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம். இந்த நிலையில் நம் நாட்டில் ஒரு ரயிலை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவுஆகும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் செலவை இங்கே தெரிந்து கொள்வோம்.

ரயிலில் மின்சாரம், தண்ணீர், கழிவறை, மின் விசிறி, ஏசி ஆகிய அனைத்து வசதிகளும் இருக்கும். இவை அனைத்துக்கும் தேவையான கட்டமைப்புடன்தான் ஒரு ரயில் உருவாக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் அதிகசெலவு இல்லை. இந்திய இரயில்வேயின் எஞ்சினை உருவாக்குவதற்கு 2 வழிகள் உள்ளது. இதில் ஒன்று மின்சாரம் மற்றும் மற்றொன்று – டீசல் ஆகும். இப்போது நம் நாட்டில் 52% ரயில்களானது டீசல் மூலம் இயங்கி வருகிறது. டூயல் மோட் லோகோமோட்டிவ் ரயிலின் விலையானது சுமார் ரூபாய்.18 கோடி ஆகும். அதே நேரம் 4500 ஹெச்பி டீசல் இன்ஜின் விலை சுமார் ரூபாய்.13 கோடி என்று கூறப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்களைவிட வசதிகள் குறைவு என்பதால் சாதாரண பயணிகள் ரயிலை உருவாக்க 50 -60 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 1 எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தமாக 24 பெட்டிகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு பெட்டிக்கும் சுமார் 2கோடி ரூபாய் செலவு ஆகும். இப்பெட்டிகளின் மொத்த விலை சுமார் 50 கோடி ஆகும். இவற்றில் என்ஜின்கள் 20 கோடி ஆகும். இவை இரண்டையும் இணைத்து ரூபாய்.70 கோடி மதிப்பில் எக்ஸ்பிரஸ் ரயில் தயாராகிறது. எனினும் வசதிகளுக்கு ஏற்றவாறு அவற்றின் விலை மாறுபடும். ஜெனரல் மற்றும் ஸ்லீப்பருடன் ஒப்பிடும் போது ஏசி பெட்டிகள் விலை அதிகம் ஆகும்.

Categories

Tech |