சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை சங்கன்கோட்டை தெருவில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தீபாவளி சீட்டு வசூலித்து திரும்ப கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் அன்னபூரணி என்பவர் மூலம் 15 பேர் 3.57 லட்ச ரூபாயை கஸ்தூரியிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால் சீட்டு பணத்தை கஸ்தூரி திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 9-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கஸ்தூரி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து அன்னபூரணி சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.