மாலை வேளையில் குழந்தைகளுக்கு சிறந்த ஸ்னாக்ஸ் ரவை அப்பம். விரும்பி சாப்பிடுவார்கள்..
ரவை – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்பொடி – ஒரு டீஸ்பூன்
தேங்காய் ( துருவியது) – ஒரு கப்
தண்ணீர் – ஒரு கப்
நெய் – 3 டீஸ்பூன்
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, வாசனைக்கு ஏலக்காய் பொடி, துருவிய தேங்காய் போட்டு நல்லா கலந்துகொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதித்து வரும் பொழுது நாம் கலந்து வைத்திருக்கும் ரவை, சர்க்கரை ஏலக்காய் பொடி தேங்காய் ஆகியவையே அதனுள் தட்டி நன்றாக கிளறி வேகவிட வேண்டும். சர்க்கரை உருகிவிடும்.
சின்ன, சின்ன உருண்டையா உருட்டி வடை போல வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு வேகா விட்டு பொன்னிறமாக எடுத்து சாப்பிட வேண்டும்..