ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை jio போனில் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் 4ஜி சிம் கார்டுடன் ரூ.15,000 பட்ஜெட் லேப்டாப்பை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு “ஜியோ புக்” என பெயரிடவும் ரிலையன்ஸ், ஜியோ ஆலோசனை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் லேப்டாப் வினியோகம் செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால் காம் மற்றும் மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்ய உள்ளது.
மேலும் சில பயன்பாடுகளுக்கான ஆதரவை விண்டோஸ் ஒஎஸ் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்த சில மாதங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் லேப்டாப் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு 5 ஜி சேவைக்கு ஏற்ப வடிவமைப்பு மாற்றி அமைக்கப்படும். குறைந்த விலை போன்கள் சந்தையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியதைப் போலவே குறைந்த விலையிலான லேப்டாப்களும் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.