பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு செல்வோம் என்று வற்புறுத்தி ஓசூருக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது சீப்ஜிக்கு தெரியாமல் பங்கஜ் போனில் அவரின் அண்ணியுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த பங்கஜ் பாஸ்வானை, சீப்ஜி வெளியில் அழைத்து தூக்க கலக்கத்தில் இருந்தவனை அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அவர்கள் தங்கி உள்ள பகுதி எந்த காவல் நிலைய எல்லை என தெரியாது நிலையில் மற்றொரு நண்பர் மூலம் போலீசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலம் அருகில் இருந்த சீப்ஜி யை பாகலூர் போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.