ஏஜென்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சிய படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து எந்த ஒரு பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை வகுக்கும் போதும் இந்தியாவின் நிலைப்பாட்டை கணக்கில் கொள்ள வேண்டும் என பிரதம மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் போன்ற முதன்மையான பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலிங் குறிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிகழ்வுகள் நடத்த இருக்கிறது என மோடி அப்போது சுட்டிக்காட்டி உள்ளார்.