Categories
உலக செய்திகள்

சீனாவில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி…. பொன் மொழிகளை வாசித்த குழந்தைகள்…!!!

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது.

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், சீன நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் உள்ள சவோயாங் என்ற பூங்காவில் இரண்டு வருடங்கள் கழித்து நேற்று காந்தி ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். காந்தியின் பொன்மொழிகளை சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் பள்ளி குழந்தைகள் வாசித்திருக்கிறார்கள்.

அந்நகரத்தில் வாழும் இந்திய மக்களும் அதில் கலந்து கொண்டனர். கடந்த 2005 ஆம் வருடத்தில் காந்தியடிகளின் சிலை அங்கு நிறுவப்பட்டது. அப்போது முதல், காந்தி ஜெயந்தி ஒவ்வொரு வருடமும் அங்கு வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |