Categories
தேசிய செய்திகள்

ஜியோ, ஏர்டெல், VI பயனர்களே! 5ஜி நெட்வொர்க் பெற உடனே இதை பண்ணுங்க ?…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது.

சில பயனாளர்கள் 5G அனுபவத்தைப் பெறுவதற்கு 5ஜி ஃபோன்களை வாங்குகின்றனர். இதற்கிடையில் சில பயனாளர்கள் ஏற்கனவே 5G ஆதரவு சாதனங்களைக் கொண்டிருக்கின்றனர். அதேசமயத்தில் 5G போன் இருந்தால் கூட இச்சேவையை பயன்படுத்த முடியாது. இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய பயனாளர்கள் தங்களது போன்களில் 5ஜி-ஐ இயக்க சில வழி முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

# முதலாவதாக உங்களது பகுதியில் 5ஜி கிடைக்கிறதா இல்லையா என்பதை உங்கள் ஆபரேட்டரிடம் சரிபார்க்க வேண்டும். விபரங்களை அறிவதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல் (அல்லது) விஐ -ன் வாடிக்கையாளர் சேவையுடன் பேசலாம்.

# உங்களது பகுதியில் உள்ள ஆபரேட்டரிடம் 5G இருப்பின், ஜியோ, ஏர்டெல் (அல்லது) விஐ வழங்கும் 5ஜி பேண்டுகளுக்கு ஃபோனில் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

# தற்போது உங்களது 5G ஸ்மார்ட் போனின் செட்டிங் பகுதிக்கு சென்று, பின் மொபைல் நெட்வொர்க் விருப்பத்தைக் கிளிக்செய்ய வேண்டும்.

# 5G இணைப்பை இயக்க விரும்பக்கூடிய ஆபரேட்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# சிம் 1 (அல்லது) சிம் 2-ஐ கிளிக்செய்து, விருப்பமான நெட்வொர்க் வகையைப் பெற கீழே ஸ்கிரால் செய்ய வேண்டும்.

#தற்போது 5G/4G/4G/2G (ஆட்டோ)விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது ஸ்மார்ட் போன் உங்கள் பகுதியில் இயங்கும் 5G நெட்வொர்க்கை தானாகவே கண்டறிந்து அதனை உங்கள் மொபைலில் இயல்பு நிலை தரவு இணைப்பு விருப்பமாக மாற்றும்.

# உங்களது மொபைலில் மென் பொருளைப் புதுப்பிக்க வேண்டி இருக்கலாம். ஆகவே 5ஜி குறித்த எந்த அம்சத்திற்கும் ஏதேனும் புதுப்பிப்பு இருக்கிறதா என்பதை அறிய அமைப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.

# தற்போது உங்கள் மொபைலை ஸ்விட்ச்ஆப் செய்து, மீண்டுமாக ஆன் செய்யவேண்டும். உங்களது வட்டம்/பகுதியில் 5G இருந்தால் அது செயல்படத் துவங்கும்.

Categories

Tech |