விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் கஞ்சா போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதியில் தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அன்பீர் பாஷா மகன் சதாம்(31) என்பவர் அவரது வீட்டில் போதை ஊசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் போதை ஊசி தயாரிக்க பதுக்கி வைத்திருந்த ஏழு குளுக்கோஸ் பாட்டில், 160 போதை மாத்திரைகள், 10 ஊசியுடன் கூடிய சிரஞ்ஜி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சதாமை காவல் நிலைய அழைத்துச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், திண்டிவனம் பங்களா தெருவில் சேர்ந்த சூர்யா(22), கிடங்கல் 2 எம்ஜிஆர் பகுதி சேர்ந்த ஷாம்(19), திண்டிவனம் செஞ்சி மெயின் ரோடு மதர் சாய் தெருவை சேர்ந்த சிவா(26) ஆகியோர் போதை ஊசி தொடர்ந்து சப்ளை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து போதை ஊசி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தபோது 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போதை ஊசிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சதாம் என்பவர் விற்பனை செய்த மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் போதை ஊசி தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால் மேலும் இதில் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.