Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவில் விதிமுறை மீறல்” கிடைத்த ரகசிய தகவல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு டாரஸ் லாரிகள் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற மூன்று லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 1.46 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் சேரன்மாதேவி பகுதியில் அதிகபாரம் ஏற்றி சென்ற லாரிக்கு தாசில்தார் பாலசுப்பிரமணியம் 33,000 ரூபாய் விதித்துள்ளார். மேலும் அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Categories

Tech |