Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்ததில் கோர விபத்து…. 27 பக்தர்கள் பலி….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….. பெரும் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணையில் 11 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |