மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த அரசாங்க வீட்டு வசதி திட்டத்தில் பயன் அடைந்து இருக்கக்கூடாது.
முதன்முறையாக இந்த திட்டத்தில் இணைந்து இருக்க வேண்டும். இது போல சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்த திட்டத்தின் மூலமாக வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மத்திய அரசு சார்பாக ரூபாய் 547 கோடி, மாநில அரசின் பங்கான 365 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. வீடு கட்ட விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு ரூபாய் 2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.