Categories
உலக செய்திகள்

“வன்முறை மற்றும் மரணச் சூழலை நிறுத்த வேண்டும்”…. ரஷ்யா அதிபருக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!!!

போரை நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு 222 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஆயுதங்களை வழங்கியும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. இதற்கிடையில் போரில் கைப்பற்றப்பட்ட லூகன்ஸ்க், டொனேஸ்ட்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய நான்கு நகரங்களையும் ரஷ்யா தங்கள் நாட்டோடு இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நான்கு நகரங்களும் ஒட்டு மொத்த உக்ரைனின் 15 சதவீதம் ஆகும். இந்த இணைப்பால் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடம் கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உரையாற்றியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, உக்கிரனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சூழலை நிறுத்த வேண்டும் என ரஷ்யா அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அணு ஆயுத யுத்த ஆபத்து அபத்தமானது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த மனதுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |