Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்…. முதன்முறையாக KG மாணவர் சேர்க்கை…. முக்கிய அறிவிப்பு…!!!!

அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் முறையாக கே.ஜி.வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்கான அட்மிஷன் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி பள்ளிகளில் இருந்தன. இந்நிலையில், பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில் துவங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு வரும் 10ம் தேதி வரை நடக்கும் என்றும், விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிருவகிக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியாகும். இது இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களிலும் செயல்படுகிறது.

Categories

Tech |