Categories
அரசியல்

“நவராத்திரி திருவிழா” சரஸ்வதி தேவியின் அருளை பெற சிறப்பு மந்திரங்கள் இதோ….!!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை பெற கல்வி கடவுளான அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதி மந்திரத்தை கூறுவதன் மூலம் அன்னை சரஸ்வதியின் பரிபூரண அருளை பெறலாம்.

சரஸ்வதி மந்திரம்:
“ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே”
“ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா”
சரஸ்வதி மந்திரத்தின் பலன்கள்:
இந்த மந்திரங்களை நவராத்திரி தினத்தில் மட்டுமில்லாமல் அனைத்து நாட்களிலும் சொல்லி சரஸ்வதி தேவியின் அருளை பெறலாம். பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் தினமும் 5 முறை மனதார உச்சரித்து சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். இதனால் மனதில் உள்ள பயம் நீங்கி நல்ல ஞாபக சக்தி, அறிவாற்றல், எதிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சமயோஜித புத்தி ஆகியவை அதிகரிக்கும்.

Categories

Tech |