Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தியன் 2 விபத்து – கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் – அழகிரி வேண்டுகோள் …!!

அவிநாசி விபத்திற்கு  சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநர் தான் காரணம் என்று கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின்  காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்டு நிருபர்களிடம் பேசிய அவர் அவிநாசியில் ஏற்பட்ட பேருந்து கண்டெய்னர் லாரி விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

இதற்கு முக்கிய காரணம் சரியான பயிற்சி இல்லாத ஓட்டுநரும் , இந்தியன் பட பணியில் அறைக்குள் இருந்து கொண்டு வாகனத்தை பரிசோதிக்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளும் தான் என கூறியுள்ளார். இதுபோன்ற தவறுகள் இனியும் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு போக்குவரத்துதுறை தான் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என  கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

Categories

Tech |