புதுக்கோட்டையில் கோகிலா என்பவர் தனது தற்கொலைக்கு திமுக நிர்வாகியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் குமாருக்கும் கோகிலாவிற்கும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து குமார் இவர்களுக்குள் ஏற்பட்ட நடைபாதை பிரச்சனை தொடர்பாக கடந்த இருபதாம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கோகிலா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
அதேசமயம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்இந்நிலையில் குமார் கட்சி பவரை காட்டி எங்கள் மீது வழக்கு பதிவு செய்து விட்டார். போலீஸ் மிரட்டுகின்றனர். எங்கள் சாவுக்கு குமார் மற்றும் அவரின் மனைவியே காரணம் என கோகிலா கடிதத்தில் குறிப்பிட்டார்.