பாரதி கண்ணம்மா ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்பொழுது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் வெண்பா கர்ப்பமாக இருக்கின்றார். கர்ப்பத்திற்கு ரோகித் தான் காரணம் எனத் தெரிந்தும் பாரதி தான் தனக்கு தாலி கட்ட வேண்டும் என வற்புறுத்துகின்றார். அதற்கு பாரதி ஒப்புக் கொள்ளாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார். வெண்பாவை மருத்துவமனையில் பாரதி சேர்த்து விடுகின்றார்.
ஆனால் வெண்பா மருத்துவமனையிலும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகின்றார். பின் வேறுவழி இல்லாமல் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கின்றார். இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாரதி உங்க தியாகத்திற்கு ஒரு அளவே இல்லையா என விமர்சித்து வருகின்றார்கள்.