”ஆதிபுருஷ்” படத்தின் டீசரை படக் குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர்.
பிரபல நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ”ஆதிபுருஷ்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. 3d தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை படக் குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.