Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதன் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.இதனை தொடர்ந்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த  நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெட் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுக்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு தேதி குறித்த விவரம் இந்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் 2760 தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி காலம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது மேலும் ஒரு வருடத்திற்கு தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நியமனம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |