கிருஷ்ணகிரி மாவட்ட புதூர் கிராமத்தில் லட்சுமணன்(52) என்பவர் வசித்து வருகிறார. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டில் அருகில் வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது குழியின் முன்பு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அறுத்த கோழி மற்றும் மண்வெட்டி கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொலையா? என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லட்சுமணியின் நண்பர் தான் கொலையாளி என்று தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணி அளித்த வாக்கு மூலத்தில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லட்சுமேனன் மகளுக்கு பேய் பிடித்திருந்தால் சிரஞ்சீவி என்ற சாமியார் வந்தார்.
அவர் பேய் ஓட்டிவிட்டு செல்லும்போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப்பதாக கூறினார். அந்தப் புதையலை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று லட்சுமணனுக்கு ஆசை வந்தது. அதனால் என்னை தொடர்பு கொண்டான். எனக்கும் புதையல் மீது ஆசை ஏற்பட்ட நிலையில் புதையலை எடுக்க நரபலி தர வேண்டிய இருந்தது. அதே நேரத்தில் ராணி என்ற பெண் தனக்கு பேய் ஓட்ட வேண்டிய லட்சுமணனிடம் வந்தார். அதனால் அவரை பலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தோம். அதன் பிறகு புதையல் இருப்பதாக கூறப்படும் இடத்தில் ஒன்றரை அடிக்கு குழியும் தோண்டிய நிலையில் ராணி அங்கு வரவில்லை. இதனையடுத்து புதையலை தான் மட்டும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சுமணன் என்னை நரபலி கொடுக்கும் நோக்கத்தில் கழுத்தில் கடிக்க வந்தான். இதனால் சுதாரித்துக் கொண்ட நான் அவனை கொலை செய்து நரபலி கொடுத்து லட்சுமணன் கொலை செய்தேன். ஆனால் நரபலி கொடுத்தும் பூஜைகள் செய்தும் புதையல் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.