Categories
தேசிய செய்திகள்

உடனே வேலைக்கு திரும்புங்க…. இல்லனா எஸ்மா சட்டம் பாயும்…. மின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…. !!!!

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மையமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசு மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் மின் சார்ந்த பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மின்தடையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் தவறான ஒன்று. பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்ய வேண்டாம் என மின் ஊழியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |