தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது அந்தந்த நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம்.
அதேபோல் நாளை சென்னையில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், ஆதிலட்சுமி நகர், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.