Categories
சினிமா தமிழ் சினிமா

“சைலன்டாக சம்பவம் செய்த கார்த்தி”…. இது வேற லெவல்பா….!!!!!!

கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உருவெடுத்திருக்கின்றார். இவர் நடிப்பில் சென்ற மாதம் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். இதில் கார்த்தி வந்திய தேவனாக நடித்து தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். படத்தை பார்த்த பலரும் கார்த்தியின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் படம் வெளியாகிய ஓரிரு நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இதன் மூலம் கார்த்தி நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த மூன்றாவது திரைப்படம் பொன்னியின் செல்வன் ஆகும். முன்னதாக கார்த்தி நடித்த தோழா, கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.

Categories

Tech |