இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்படி ஆதார் விபரங்களை மாற்றும் பொழுது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். அதனால் உங்கள் கைகளில் உள்ள செல்ஃபோன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். தற்போது ஆதாரை வைத்து பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருவதால் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வங்கி கணக்கிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதாரை பயன்படுத்தி பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும். எனவே ஆதார் அட்டைதாரர்கள் இதெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியம்.
ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஓடிபியை யாரிடமும் பகிர கூடாது. ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் செல்போனை எப்போதும் கைகளில் வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டு விவரங்களை சரி பார்க்க https://myaadhaar அல்லது uidai.gov.in வெப்சைட்டை பயன்படுத்தவும். ஆதார் தொடர்பான QR code-களை காரணமின்றி ஸ்கேன் செய்யக்கூடாது. ஆதார் எண் பாதுகாப்பு கருதி மாஸ்க் ஆதார் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆதார் தொடர்பான விவரங்களை அறிய maadhaar என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.