நைஜீரியா நாட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு ஊசி மூலமாக செயற்கையாக மருந்து செலுத்தி வயிரை வீங்க செய்து பிச்சை எடுக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியா நாட்டின் lagos என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப் பகுதியில் இருந்து நான்கு பேர் சிறுவர்களை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து மூலமாக ஊசியை அவர்களுக்கு செலுத்தினர். இந்த ஊசியை போடுவதன் மூலமாக அவர்களுக்கு வயிறு வீங்கி பெரிதாகிறது.
பின்னர் மோசமான நோய்வாய்ப்பட்டவர்கள் என்று கூறப்பட்டு அந்த சிறுவர்களை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுக்க வைக்கிறார்கள். இந்த சம்பவங்கள் காவல்துறை கவனத்திற்கு வந்த நிலையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற செயலை மேலும் சிலர் செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது எனவும் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.