Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்படியாவது காப்பாற்றுங்கள்…! ரொம்ப சித்திரவதை செய்றான்…. கண்ணீர் மல்க வீடியோ…. பெண்ணிற்கு நடந்தது என்ன….????

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கத்தில் உள்ள வடுகபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பிரவீனா. சேகர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் பிரவீனா அங்குள்ள பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பிரவீனாவின் தாய் தன்னுடைய மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் காணாமல் போன பிரவீனாவை தேடி வந்தனர்.

அப்போது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் பிரவீனா பேசி இருக்கிறார். அதில் தமிழ்செல்வி என்பவருடைய கணவர் சிவக்குமார் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று என்னிடம் வீட்டை வங்கி கடன் வைத்து 75 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டார். மேலும் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்ட நிலையில் தன்னுடைய வீட்டு சொத்து பத்திரம் ஏலத்துக்கு வந்தது.

இதனால் பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்து செல்வதாக கூறி திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். மேலும் தன் தாய் தந்தையிடம் தனக்கு அவ பெயரை ஏற்படுத்திவிட்டார். என்னை எப்படியாவது அவரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள். நான் உங்களை சொந்த அண்ணனாக நினைக்கிறேன். அவன் என்னை ரொம்ப சித்தரவதை செய்கிறான் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்

Categories

Tech |