Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.

மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதை பார்த்து ரசிக்கின்றனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்களுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |