ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் லைமன் நகரை மீட்டு உக்ரைன் படையினர் அசத்தியுள்ளனர்.
உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய படையினரின் போரானது, எட்டாவது மாதமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய காலகட்டங்களில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் பகுதிகளை தற்போது உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி நேற்று லைமன் என்னும் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரத்தில் ரஷ்ய வீரர்கள் சுமார் 5500 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
Ukrainian troops have entered Lyman pic.twitter.com/gmkcfULjp2
— Illia Ponomarenko 🇺🇦 (@IAPonomarenko) October 1, 2022
அவர்களை சுற்றி வளைத்த உக்ரைன் படையினர் இறுதியில் அந்நகரை மீட்டு விட்டார்கள். அதன் பிறகு நகரத்தின் நுழைவு வாயிலில் தங்கள் நாட்டின் கொடியை உக்ரைன் படையினர் பறக்க விட்டிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, லைமன் நகரிலிருந்து ரஷ்ய படையினர் வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.