தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கிருந்த கிராம் மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்காக கேள்வியை முன் வைத்தனர். இவ்வாறு மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறியுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.