சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில்வரி மூலமாக ₹945 கோடி கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விட 345 கோடி வரை கூடுதலாக வசூலாகி இருக்கிறது. சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வார்டுகள் இருக்கிறது இந்த சூழலில் 20202 – 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் வருவாயை உயர்த்தவும் நீண்ட கால நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் உரிய நேரத்தில் வரியை செலுத்துபவர்களுக்கு சலுகைகளையும் மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டில் மொத்த வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு வரி வருவாய் நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டிலேயே வரி வசூல் ஆகி இருப்பதாக மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 2021- 2022 ஆம் நிதி ஆண்டில் மொத்தமே ரூபாய் 1,240 கோடி வரி வசூல் ஆகி இருந்தது ஆனால் இப்போது முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வசூல் ஆகி இருக்கிறது.