Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் துரோக கூட்ட விஞ்ஞானி செல்லூர் ராஜு – AIADMKவின் EXநிர்வாகி கிண்டல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தற்போதுக்குள்ள திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால்  யாரும் ஃபேன் போட முடியாது, யாரும் டிவி பார்க்க கூடாது, யாரும் லைட் போடக்கூடாது, பழைய காலத்துக்கு போயிடுங்க என்கிறார் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள்…. நீங்க எங்க லைட் போடுறீங்க ? அரிக்கன் விளக்கு வாங்கிக்கோங்க, ஒரே ஒரு லைட்டில் இருங்க.

ஒரு 100 யூனிட் இலவசம் சொல்றீங்க…  சரி அதை மாசத்துக்கு ஒரு தடவை கணக்கு எடுத்த தானே , நீங்க 100 யூனிட் போக மீதிக்கு பில் போட முடியும். இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை கணக்கு எடுத்தீங்கன்னா…  அது எப்படி போகும்? நீங்க செந்தில் பாலாஜி போய் கேளுங்க, அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுவாரு. ஏங்க கரண்ட் போச்சுன்னு கேளுங்க ? மரத்துல அணில் ஒடிச்சு, அதனால..

அது கம்பி மேல தாவுச்சு என  இப்படி ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை செந்தில் பாலாஜியை தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. நம்ம கிட்ட இருந்து போயி, அந்த துரோக கூட்டத்தில் இருக்காரே  விஞ்ஞானி செல்லூர் ராஜு… தர்மாகோல் போட்டு தண்ணீர் தடுத்து நிறுத்துறேன்னு சொன்னாரே.. அந்த மாதிரி தான் இன்னைக்கு செந்தில் பாலாஜி சொல்றதும் இருக்கு. அணிலால கரண்ட் கட் ஆயிடுச்சாம் என சொல்லி கிண்டல் அடித்தார்.

Categories

Tech |