ஜீப் ஓட்டுநரை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் வாடகைக்கு ஜீப் ஓட்டி வருபவர் ராஜமணி. அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை ஜீப் ஓட்டுநர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு காரணம் ராஜமணி தான் என நினைத்த மோகன் ராஜமணி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று ராஜமணியை மோகன் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மோகன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறியுள்ளனர். காவல் துறையினர் படுகாயமடைந்த ராஜமணியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அரிவாளால் வெட்டிய மோகன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் சரண் அடைந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.