உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உண்ணாவ் என்ற பகுதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கும்பலாக பக்தர்கள் சிலர் டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றுக் கொண்டு வந்த டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்த நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.