தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் இந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக மக்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.