Categories
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கு தயாராபவரா நீங்க….? இதோ அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழக அரசு மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறத. அந்த வகையில் தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் முதல் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே இதில் பயிற்சி பெற விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.civilservicecoaching.com  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு அக்டோபர் ஏழாம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |