போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய பகுதியிலோ அல்லது பள்ளி, கல்லூரிக்கு அரை கிலோ மற்றும் வேறு ஏதாவது இடத்திலோ போதை பொருள் விற்பனை நடைபெறுவது தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை 9541444100, 8300014567 என்ற தொலைபேசி எண்ணுக்கும் whatsapp எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் சொல்லும் தகவல்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் எனவும் டிஎஸ்பி கூறியுள்ளார்.