Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்”… பல மாணவிகள் உடல் சிதறி உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!!

ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர்.

மேலும் இந்த தற்கொலை படை தாக்குதலை நேற்று 19 பேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் கல்வி நிலையத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என கூறப்பட்டுள்ளது ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |