Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு யார் பொறுப்பேற்பது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என சீமான் கூறியுள்ளர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் சார்பில் நவம்பர் மாதம் 6-ஆம்  தேதி நடத்தப்படும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஆர்.எஸ். எஸ். ஸின் பேரணி நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குறைக்கப்படும் என கருதி தமிழக அரசு அதற்கு மறுத்திருக்கும் நிலையில் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு தமிழகத்தின் பெருவாரியான கட்சிகளும், பொதுமக்களும் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்திருப்பது தமிழகத்தில்  நிலவி வரும் மத நல்லிணக்கமும், சகோதரத்துவ மனப்பான்மையும் சிதைத்து விடக்கூடாது என்கின்ற பொது நோக்கத்திற்காக தான். மேலும் தமிழக அரசு அனுமதி வழங்காதது பேரணிக்கு தடை விதித்தது மாநிலத்தின் நலன் கருதியும், மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும் எடுக்கப்பட்ட முடிவு.

ஆனால் இந்த முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் இத்தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகிறது. மேலும் மாணவர்கள் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேர்வு வேண்டுமென்று அரசின் முடிவை ஏற்கின்ற நீதிமன்றம், இப்பேரணி விவகாரத்தில் மட்டும் ஏன் விதிவிலக்கை  கடைப்பிடிக்கிறது? சட்ட ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக்கூறி எடுத்துரைக்கும் நீதிமன்ற அவமதிப்பெனக்கூறி, பேரணியை அனுமதிக்க வலியுறுத்துகிற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதானா?. மேலும் பெரும்பாலான மக்களால் தேர்வு செய்யப்பட்ட இறையாண்மையுள்ள மாநில அரசின்  நிர்வாக முடிவை புறந்தள்ளிவிட்டு நீதிமன்றம் அப்பேரணிக்கு அனுமதி வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது அம்மக்களை அவமதிப்பதற்காகவா?.

இந்நிலையில் எல்லாவற்றையும் மீறி அப்பேரணி நடைபெறும் போது அதில் ஏதேனும் கொடுஞ்செயல்கள், விருப்பத்தகாத  நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு நீதிமன்றம் பொறுப்பேற்குமா?.  இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எந்த காலத்திலும் அனுமதி வழங்க கூடாது என தமிழகத்தின் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் அனுமதி வழங்காத நிலையில், தற்போது ஆளும் திமுக அரசு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்  நோக்கத்தை எடுத்துக் கூறாது. மேலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மீதான தடையையே  ஒரு காரணமாக கூறுவது வலுவற்ற வாதம் இல்லையா? காந்தி ஜெயந்தி அன்று மட்டும் இல்லாமல் எந்த நாளில் பேரணி நடத்தினாலும் தமிழகத்தின் அமைதி குலையுமென வாதிட வேண்டிய தமிழக அரசு மற்ற நாட்களில் நடத்துவது சிக்கல் இல்லை என உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது மோசடி தனம் இல்லையா? எதற்கு இந்த குழப்பவாதம், இரட்டை வேடம்?.ஆகவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு சிறிய கவனம் எடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ். ஸின் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Categories

Tech |