பிரபலமான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற டேலண்ட் ஷோவில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கலந்து கொண்டவர் நவீன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நவீன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், முதல் மனைவி விவாகரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பின் மலேசியா நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை காதலித்து 2-வதாக நவீன் திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடி இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள்.
இவர்களை பலரும் பாலோ செய்து வரும் நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை தங்களுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.அதாவது நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஜோடிகளுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி உருக்கமான ஒரு விஷயத்தை கூறியிருந்தனர். அதாவது எங்களுக்கு திருமணம் முடிந்த பிறகு பலரும் எங்களுக்கு குழந்தை பிறக்காது என்றெல்லாம் பல்வேறு விதமான சாபங்களை விட்டனர். சாபம் விட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி.
நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்த கிருஷ்ணகுமாரி, உன் பிஞ்சு பாதத்தை பார்ப்பது எங்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உன்னை நாங்கள் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.