Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. இனி Internet Data கட்டணம்…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…….!!!!

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன.

இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் ஆப் திங்ஸ், மெஷின் டு மெஷின் கம்யூனிகேஷன், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் பயன்பாடு ஆகியவை மேம்படும்.முழு நீள உயர்தர வீடியோ அல்லது திரைப்படத்தை கைபேசி சாதனத்தில் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 

இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, இதற்கு முன்னதாக 1 ஜிபி டேட்டா 300 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. நாட்டில் சராசரியாக அனைவரும் மாதத்திற்கு 14 ஜிபி டேட்டா வரை பயன்படுத்துகின்றனர். இதற்கு முன்பு இருந்த செலவில் கணக்கிட்டால் இதற்கு 4, 200 ரூபாய் ஆகும். ஆனால் தற்போது 125 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. அரசின் கடும் முயற்சியின் பலனாகவே இது சாத்தியமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |