புதிதாக ஒரு வைரஸ் பரவுவதாக உலக சுகாதாரத் அமைப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ ஜிப்ரியேசிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மிகவும் மகிழ்ச்சியானது. ஆனால் தற்போது ரஷியாவில் உள்ள வல்வால் பகுதியில் புதிதாக ஒரு வைரஸ் தொற்று காணப்பட்டுள்ளது. இதற்கு கோஸ்டா 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இவரின் இந்த அறிக்கையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.